அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான முறிந்த வர்த்தகப் பேச்சுவார்த்தையை "சில நாட்களில்" அல்லது 2 முதல் 3 வாரங்களுக்குள் மீண்டும் தொடங்குவார் என்று தாம் "உறுதியாக நம்புவதாக" கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் (Gavin Newsom) தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் காரணமாக டிரம்ப் தனது சொந்தக் குடியரசுக் கட்சியினரிடமிருந்தே கடும் அழுத்தங்களைச் சந்தித்து வருவதாக நியூசம் குறிப்பிட்டுள்ளார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இந்த வர்த்தக மோதலைக் கையாளுவதைப் பாராட்டிய நியூசம், "டிரம்ப் பலத்திற்கு மதிப்பளிப்பார், பலவீனத்தை அல்ல" என்று தெரிவித்தார்.
வர்த்தகப் போரினால் கலிபோர்னியாவின் ஒயின் (Wine) ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கனடா சந்தைகளில் அமெரிக்க மதுபானங்கள் மீதான தடை நீடிக்கிறது.
டிரம்பின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த நியூசம், வெள்ளை மாளிகையில் உள்ள அவரை ஒரு "ஆக்கிரமிப்பு உயிரினம்" (invasive species) என்றும், கனடாவை அவர் நடத்தும் விதம் தமக்கு அருவருப்பளிப்பதாகவும் கூறியுள்ளார்.