யாழ். தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனுக்கு அஞ்சலி!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இன்று (04) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சம்பந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த முடியும் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap