ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கனடாவின் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஸ்காப்ரோவின் வோர்டன் அவன்யூவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த ஆண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் காயமடைந்த குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் மேற்கொண்ட நபர் வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Bootstrap