லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறித்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இவ்வாறான நிலையில், வடக்கு இஸ்ரேலில் உள்ள ஷபத் நகரம் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் இடைமறித்து அழித்துள்ளது.
இது தொடர்பில் இஸ்ரேல் ராணுவம் கூறும்போது,
லெபனானிலிருந்து இஸ்ரேல் நகரம் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. முதலில் சுமார் 20 ஏவுகணை வீசப்பட்டன. 30 வினாடிகளுக்கு பிறகு 35 ஏவுகணைகள் ஏவப்பட்டன.
பல ஏவுகணைகள் நடுவானில் இடைமறிக்கப்பட்டன. சில ஏவுகணைகள் திறந்தவெளி பகுதிகளில் விழுந்தது. இதன்போது யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.