திருச்சி: திருச்சி என்ஐடியில் படித்து வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவி கடந்த 15 ஆம் தேதி முதல் காணவில்லை என புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர், திருச்சி என்ஐடியில் எம்சிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் அங்குள்ள மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி விடுதியை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை.
அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவருடைய செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறையில் போலீஸார் சோதனை செய்த போது அந்த மாணவி எழுதிய ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், எனக்கு எம்சிஏ பாடங்களை புரிந்து கொண்டு படிப்பது மிகவும் கடினமாக உள்ளது. என்னால் படிக்க முடியவில்லை என எழுதியிருந்தார்.
Hezbollah -வை Stone Age-க்கு அனுப்புகிறதா Israel? | Lebanon | Oneindia TamilHezbollah -வை Stone Age-க்கு அனுப்புகிறதா Israel? | Lebanon | Oneindia Tamil
Hezbollah -வை Stone Age-க்கு அனுப்புகிறதா Israel? | Lebanon | Oneindia Tamil
மேலும் அவருடன் படித்த மாணவர்கள் யாராவது காணவில்லையா என போலீஸார் விசாரித்தனர். அது போல் எதுவும் இல்லை. மேலும் அந்த மாணவியின் செல்போனை சோதனை செய்த போது அவர் காணாமல் போனதற்கு முன்பு தனது சகோதரனுடன் நீண்ட நேரம் பேசியது தெரியவந்தது. மற்றபடி அந்த மாணவி எந்த மாணவருடனும் பேசியதாக அவருடைய செல்போன் ஹிஸ்டரியில் இல்லை. எனவே மாணவி காதல் வயப்பட்டு யாருடன் சென்றிருக்கவில்லை என்பது ஊர்ஜிதமாகிறது.
மேலும் அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து அவருக்கு தெரிந்தவர்கள், உறவினர்களிடம் போலீஸார் விசாரிக்கிறார்கள். மேலும் தனது சகோதரனிடம் அவர் என்ன பேசினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் திருச்சி என்ஐடியில் மாணவி விடுதிக்கு இன்டர்நெட் இணைப்பு கோளாறை சரி செய்ய வந்த நபர் அங்கிருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து வார்டன் பேபியிடம் கூறியபோது , நீ ஏன் அது போன்ற அரைகுறை ஆடையை அணிந்துள்ளாய் என கேட்டதாகவும் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, தவறு செய்தவர்களை விட்டு விட்டு ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணை குறை சொல்வதா என குமுறியுள்ளார். இதைத் தொடர்ந்து மாணவிகள் எல்லாம் இணைந்து விடிய விடிய போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு பாதுகாப்பு அதிகரிக்கப்படும், சம்பந்தப்பட்ட வார்டன் மாற்றப்படுவார் என்ற உத்தரவாதங்களை அளித்ததும் மாணவர்கள் வகுப்பிற்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.