"தமிழ் ஜனதிபதி வேட்பாளரின்" முக்கியத்துவம், வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் வெளி யேற்றப்பட வேண்டும் போன்ற விடயங்கள், தற்பொழுது நடைபெறும், ஐ.நா.மனித உரிமை சபையின் 57வது கூட்டத் தொடரில், திருமதி டியேற்றி மக்கோணால், இன்று 20 செப்டம்பர் 2024ல், சர்வதேச சர்வநம்பிக்கை என்ற அமைப்பு சார்பாக ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார். டியேற்றி மக்கோணால் "தமிழர் மனித உரிமைகள் மையத்தின் - TCHR" சர்வதேச இயங்குனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.