கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் ஆசிரியர் ஒருவர் தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
22 ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராக கடமையாற்றி வரும் 47 வயதான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
பதின்ம வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 5ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எந்த பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றது என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
எவ்வாறு எனினும் டொரண்டோவை சேர்ந்த டோனி பனிக்கியா என்ற 47 வயது ஆசிரியரே இந்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
இந்த ஆசிரியருக்கு எதிராக சுமார் 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆசிரியர் வேறு மாணவர்களையும் தகாத செயற்பாடுகளுக்கு உட்படுத்தி இருப்பார் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது