கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள கிச்சனர் (Kitchener) நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கடத்தல் சம்பவம் தொடர்பாக, 33 வயதுடைய வாட்டர்லூவைச் சேர்ந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை காலை கோர்ட்லண்ட் அவென்யூ மற்றும் ஹேவர்ட் அவென்யூ சந்திப்புக்கு அருகிலுள்ள வீட்டொன்றில் துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் காயமடைந்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
எனினும், பொலிஸார் அங்கு சென்றபோது காயமடைந்த நபர் சம்பவ இடத்தில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்களின் தன்மை மற்றும் தீவிரம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு வாட்டர்லூ பிராந்திய காவல்துறை தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.