கனடாவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்கள் வேலை செய்வது தொடர்பாக, அந்நாட்டின் குடியேற்றத் துறை (IRCC) புதிய மற்றும் இறுக்கமான வழிகாட்டுதல் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
போர்டேஜ் கல்லூரி (Portage College) உள்ளிட்ட சில கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சர்வதேச மாணவர்களின் வேலை அனுமதி (Work Permit) விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உங்களுடைய கல்வி அனுமதிப் பத்திரத்தில் (Study Permit) 'வேலை செய்யலாம்' என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே கனடாவில் வேலை செய்ய முடியும்.
வகுப்புகள் நடைபெறும் காலங்களில் தகுதியுள்ள சர்வதேச மாணவர்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 24 மணி நேரம் மட்டுமே பகுதிநேரமாக வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்.கல்வி அனுமதிப் பத்திரத்தில் முறையான அனுமதி இல்லாமல் பகுதிநேரமாகக் கூட வேலை செய்வது குடிவரவுச் சட்டத்தை மீறும் செயலாகக் கருதப்படும். கல்லூரிகளால் அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ விடுமுறை காலங்களில் மாணவர்கள் முழுநேரமாக வேலை செய்ய முடியும்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் வேலை செய்தாலோ அல்லது விதிகளை மீறினாலோ. எதிர்காலத்தில் வேலை அனுமதி மறுக்கப்படலாம். மாணவர் அந்தஸ்து ரத்து செய்யப்படலாம் அல்லது நாடுகடத்தப்படும் அபாயம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள மாணவர்கள் வேலைக்குச் சேருவதற்கு முன்னதாகத் தங்களின் Study Permit ஆவணத்தில் உள்ள நிபந்தனைகளை IRCC Official Portal மூலம் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.