டெங்கு பாதிப்பு: இலங்கையில் 92,000 ஐ கடந்த நோயாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,000 த்தை கடந்துள்ளது.

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 6,671 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,011 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் இதுவரை டெங்கு நோய் காரணமாக 68 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap