தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

தெற்கு லெபனானில் உள்ள பல பகுதிகளில், இஸ்ரேலிய இராணுவம் கடுமையான ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெற்கு லெபனானில் உள்ள வாடி அல்-சலூகி (Wadi al-Salouqi), அல்-ஹுஜைர் (al-Hujair) ஆகிய நகரங்கள் மற்றும் கப்ரிகா (Qabrikha), டூலைன் (Touline), ஹுலா (Hula) ஆகிய பள்ளத்தாக்குப் பகுதிகளில் இவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் தெற்கே உள்ள அல்-மன்சூரி (al-Mansouri) நகரத்திலும் இஸ்ரேலிய இராணுவம் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Bootstrap