“இதுவே தனது கடைசி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம்” என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் தன்னிடம், “நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர் யார்?” எனக் கேள்வி எழுப்பியதாக அவர் குறிப்பிட்டார்.
அப்போது, வேறு எந்தப் பெயரும் தனது நினைவுக்கு வராத நிலையில், “நளிந்த அண்ணா” எனத் தான் பதிலளித்ததாகவும் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
எனினும், நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்த அவர், இனிமேல் நளிந்த ஜயதிஸ்ஸவை “நளிந்த அண்ணா” என அழைக்க முடியாது என்றும், “நளிந்த சார்” என்றே அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தாம் மிகுந்த மகிழ்ச்சியுடனேயே குறித்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
மேலும், இது தனது கடைசி நாடாளுமன்ற உரையாக இருக்கக்கூடும் என்ற வகையில் அவர் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்தார்.