அமெரிக்காவின் வாஷிங்டன் பெல்லா கடற்கரையில் கொலையாளி திமிங்கிலங்கள் கரைக்கு மிக அருகில் நீந்தி வந்துதுள்ளன

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஃபாக்ஸ் தீவின் (Fox Island) பெல்லா  கடற்கரையில் (Bella Bella Beach) விசித்திரமான மற்றும் அபூர்வமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. கடற்கரையில் மக்கள் நின்றுகொண்டிருந்தபோது, ஓர் உயிரியல் குடும்பத்தைச் சேர்ந்த கொலையாளி திமிங்கிலங்கள் (Orcas) கரைக்கு மிக மிக அருகில் நீந்தி வந்து அவர்களுக்கு ஆச்சரியமளித்தன.

கடற்கரை மணல் கரைக்கு சில அடிகளே தூரத்தில் ஆழமற்ற பகுதியில் இந்தக் கொலையாளி திமிங்கலக் கூட்டம் மிக அமைதியாக நீந்திச் சென்றது.

அந்தப் பகுதியில் கடற்கரை மணலை அடுத்து உடனே ஆழமான நீர் பகுதி (steep drop-off) தொடங்குவதால், திமிங்கலங்களால் கரைக்கு இவ்வளவு நெருக்கமாக வந்து எளிதாக நீந்த முடிந்தது.

வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஸ்டெபானி மோரிஸ் (Stephanie Morris) இந்த அரிய தருணத்தைப் படம்பிடித்து பகிர்ந்துள்ள நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Bootstrap