ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் கீவ் நகரில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்

ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் கீவ் நகரில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நகரின் குடியிருப்பு கட்டிடங்கள், சேமிப்புக் கிடங்குகள், ஒரு பள்ளி மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஆகியவை பலத்த சேதமடைந்துள்ளன.

தாக்குதலால் மின்சாரக் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

ரஷ்யா ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை (Ballistic Missiles) உக்ரைன் வான் பாதுகாப்புப் படையினரால் தடுக்க முடியவில்லை என்பதை உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்கா வழங்கிய 'பேட்ரியாட்' (Patriot) ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளுக்கான வெடிமருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணம்.

"எங்களுக்கு கூடுதல் வெடிமருந்துகளும், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளும் உடனடியாகத் தேவை" என்று கீவ் மேயர் விடாலி க்ளிட்ச்கோ (Vitali Klitschko) கூட்டாளி நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், போதிய பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணைகள் இல்லாத வரை ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையைப் பற்றி யோசிக்காது என்றும், ஒவ்வொரு கூடுதல் ஏவுகணையும் தங்களது மக்களின் உயிரைக் காப்பாற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக வெள்ளிக்கிழமை கீவ் நகரில் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Bootstrap