அரச நிறுவனங்களில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்

தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாட்களும் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (20) காலமானார்.

பாடகி நந்தா மாலினியின் மறைவையடுத்து ஓகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தினங்களை தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

இதற்கமைவாக, இன்று (21), நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) ஆகிய தினங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலானது 04/2026 ஆம் இலக்க உள்நாட்டலுவல்கள் சுற்றறிக்கையின் ஊடாக அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள்/அரசாங்க அதிபர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2026 ஒகஸ்ட் 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கையில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டார கையொப்பமிட்டுள்ளார்.

Bootstrap