தரையிறங்கும் போது நடந்த கோளாறு! தூக்கி வீசப்பட்ட பயணி! பிரபல விமானத்தில் நடந்த கொடூரம்!

இருப்பதிலேயே அதிக கட்டணங்களை கொண்ட பயணமாக இருப்பது விமான பயணம் தான். அதிக ஆபத்துகளை கொண்டிருப்பதும் விமான பயணம் தான். அப்படி இருக்கும்போது, விமானங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவர்களின் கடமை.

ஆனால், கடந்த சில மாதங்களாக விமான விபத்துகள் என்பது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. குறிப்பாக, ஏர் இந்தியா விமானத்தில் நடந்த விபத்து என்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படியான சூழலில், இன்னொரு நிறுவனத்தின் விமானத்தில், நடந்துள்ள விபத்து, விமான பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து நியூயார்க் நகருக்கு டெல்டா ஏர்லைன்ஸ் என்ற பிரபல நிறுவனத்தின் விமானம் வந்துள்ளது. இந்த விமானத்தில், டேரின் ரோத் என்பவர் தனது மனைவியுடன் பயணம் மேற்கொண்டுள்ளார். விமானம் தரையிறங்கும்போது அவர் அணிந்திருந்த சீட் பெல்ட் திடீரென அறுந்து விழுந்ததால், இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர், விமானத்தின் உட்புறச் சுவர் மீது கடுமையாக மோதினார்.

இதையடுத்து, மயக்கம் அடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த சம்பவம் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த நிலையில், அந்த விமான நிறுவனத்தின் மீது டேரின் ரோத் வழக்கு தொடர்ந்துள்ளார். நான் தூக்கி வீசப்பட்டதால் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனால், எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்தார்கள். கழுத்து எலும்பு தொடர்பான அறுவை சிகிச்சையும் எனக்கு செய்துவிட்டார்கள்.

இந்த அனைத்து உடல்நலப் பிரச்சனைகளுக்கும் அந்த சீட்பெல்ட் விபத்தே காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அந்த பயணிக்கு ஏற்கனவே மாரடைப்பு பிரச்சனை இருக்கிறது. அதன்காரணமாக தான் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று, அவரது குற்றச்சாட்டுக்கு, விமானம் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும், விமான ஊழியர்களே சீட்பெல்ட் கோளாறை ஒப்புக்கொண்டிருப்பதால், ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறுப்பு தெளிவாக உள்ளதாக சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இழப்பீடு மற்றும் மருத்துவக் காரணங்கள் குறித்த விவாதங்களுடன் நடைபெற்று வருகிறது.

Bootstrap