'தி சைக்கிள் ஒஃப் லவ்'- திரைப்படத்தின் தகவல்களை பகிர்ந்துள்ள பிரியங்கா சோப்ரா

ஜாதி அடக்குமுறை மற்றும் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'தி சைக்கிள் ஒஃப் லவ்' (The Cycle of Love) என்ற புதிய திரைப்படம் குறித்த தகவல்களை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனஸ் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் இருந்து ஸ்வீடன் நாட்டுக்குத் தன் காதலியைத் தேடி 6,000 மைல்கள் சைக்கிளிலேயே பயணம் செய்த இந்தியக் கலைஞர் பி.கே. மகாநந்தியா (PK Mahanandia) வின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.a

இந்தியாவில் அவர் எதிர்கொண்ட ஜாதி அடிப்படையிலான சவால்களையும், அவமானங்களையும் இந்த திரைப்படம் ஆராய்கிறது.

இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ஓர்லாண்டோ வோன் ஐன்சீடல் (Orlando von Einsiedel) இயக்கியுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற நடிகையான பிரியங்கா சோப்ரா ஜோனஸ் இந்தப் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

Bootstrap