பாகிஸ்தானை வென்றது இங்கிலாந்து: தொடரிலும் முன்னிலை

சுற்றுலா பாகிஸ்தானிய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி, இன்னிங்ஸ் மற்றும் 103 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

ஹெடின்லியில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானிய அணி, 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது

அப்துல்லா ஷாபிக் 61 ஓட்டங்களை பெற்றார். எனினும் ஏனைய வீரர்கள் எவரும் 30க்கும் அதிக எண்ணிக்கை ஓட்டங்களை பெறவில்லை.

ஒலே ரொபின்சன் 5 விக்கட்டுக்களையும், ஜோஸ் டங் 5 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடு;த்தாடிய இங்கிலாந்து அணி, தமது முதல் இன்னிங்ஸில் 409 ஓட்டங்களை பெற்றது

ஹரி ப்ரூக் 91 ஓட்டங்களை தமது அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பெடு;த்தாட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தானிய அணி, 135 ஓட்டங்களுக்குள் அனைத்து வீரர்களின் விக்கட்டுக்களையும் இழந்தது.

இதன்படி, இன்னிங்ஸ் மற்றும் 103 ஓட்டங்களால் அந்த அணி தோல்வியடைந்தது.

இந்தப்போட்டியில் வெற்றியீட்டிதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரில் ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலை பெறுகிறது.

அதேநேரம், உலக செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி, 7ஆம் திகதி இடத்தை பெற்றுள்ளது.

குறித்த பட்டியலில் அவுஸ்திரேலிய அணி, முதல் இடத்தைப் பெற்றுள்ளது. தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து, பங்களாதேஷ், இந்தியா என்ற அடிப்படையில் புள்ளிகளின் அடிப்படையில் அணிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை தவிர இலங்கை அணி 6 வது இடத்தை வகிக்கும் நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியும் பாகிஸ்தான் அணி, இறுதியான 8வதும்,9 வதுமான இடங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

Bootstrap