பாலஸ்தீன எக்சன் அமைப்பினர் பயங்கரவாதிகள் அல்லர்: தீர்ப்பு வெளியானது

இங்கிலாந்தில் செயற்படும் 'பாலஸ்தீன எக்சன்' (Palestine Action) அமைப்பைச் சேர்ந்த ஐந்து செயல்பாட்டாளர்களுக்கு எதிராக பயங்கரவாத சட்டத்தின்கீழ் தீர்ப்பு வழங்கப்படாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லங்காஷையர் மாகாணத்தில் உள்ள பர்ன்லி (Burnley) நகரில் பார் க்ளேஸ் வங்கி கிளை மீது தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்ததாக இவர்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது.

எனினும் இவர்கள் மீதான குற்றச்சாட்டில், பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாகக் கருதி தண்டனை வழங்க முடியாது என்று, பிரெஸ்டன் கிரவுன் நீதிமன்ற நீதிபதி ரொபர்ட் அல்டாம்,தீர்ப்பளித்துள்ளார்.

இந்தநிலையில், தாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும், தங்களின் போராட்டம் ஒரு நியாயமான அரசியல் மற்றும் சமூகப் போராட்டம் என்றும், பிரதிவாதிகளான 'பாலஸ்தீன எக்சன்' (Palestine Action) அமைப்பினரால் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

Bootstrap