யுக்ரைன்- ரஷ்ய போர்: அதிகரிக்கும் பொதுமக்கள் உயிரிழப்புகள்

யுக்ரைனின் 'பேட்ரியாட்' (Patriot) வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தீர்ந்துவிட்டதால், யுக்ரைனில் உள்ள முக்கிய நகரங்கள் மீதான ரஷ்யாவின் பெலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

இதனால் பொதுமக்கள் உயிரிழப்பு சாதனை அளவை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

எனினும்,யுக்ரைன் தனது நீண்ட தூர ஆளில்லா வானூர்திகள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவின் எரிபொருள் விநியோக மையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் இராணுவத் தளங்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் யுக்ரைனின் தொடர் தாக்குதல்களால் ரஷ்யாவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், முக்கியப் பொருள் விநியோகக் கிடங்குகளும் சேதமடைந்துள்ளன.

இதனால் ரஷ்யாவில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பெரிய அளவில் நெருக்கடி ஏற்படும் என்று முன்னணி பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Bootstrap