மியான்மரின் மத்திய சாகாயிங் பிராந்தியத்தில் உள்ள மியாங் நகருக்கு அருகில் அமைந்துள்ள பௌத்த மடாலயம் ஒன்றின் மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை சுமார் 9:00 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், பௌத்த துறவிகளின் தியானப் பயிற்சியில் பங்கேற்பதற்காக மடாலயத்தில் திரண்டிருந்த 50 முதல் 70 வயதுக்குட்பட்ட 11 ஆண்களும் 3 பெண்களும் பலியாகியுள்ளனர்.
மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஜனநாயக ஆதரவுப் படையினர் இடிபாடுகளில் இருந்து உயிர்தப்பியவர்களை மீட்க முயன்றபோது, போர் விமானம் இரண்டாவது முறையாக வந்து குண்டுவீசியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் பௌத்த துறவிகள் உட்பட மேலும் பலர் காயமடைந்துள்ள நிலையில், மியான்மர் ராணுவத் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.