வங்காள விரிகுடாவில் பனாமா சரக்குக் கப்பல் விபத்து

ஒடிசா கடலோரப் பகுதியிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில், பனாமா கொடியுடன் கூடிய என்ற சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒகஸ்ட் 20 அன்று இரவு 10.30 மணியளவில் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பலில் சுமார் 1,700 தொன் இரும்புத் தாது ஏற்றிச் செல்லப்பட்டது. கப்பலில் மொத்தம் 24 பணியாளர்கள் இருந்துள்ளனர். அவர்களில் 20 பேர் சீனாவையும், 3 பேர் மியான்மரையும், ஒருவர் பங்களாதேஷையும் சேர்ந்தவர்கள்.

ஒகஸ்ட் 23 இரவு 11.48 மணியளவில் ஸ்ரீ விஜய புரத்தில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட தகவல் கிடைத்துள்ளது.

விபத்து குறித்த எச்சரிக்கை மற்றும் உதவிக்கோரிக்கை வெளியானதைத் தொடர்ந்து, இந்திய கடலோரக் காவல்படை மற்றும் இந்திய கடற்படை இணைந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. தேடல் பணிகளுக்காக 3 கடலோரக் காவல் படகுகள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், விபத்து நடந்த பகுதிக்கு அருகே பயணிக்கும் பிற கப்பல்களுக்கும் மீட்புப் பணிக்கு உதவுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், கப்பலில் இருந்த பணியாளர்களில் எத்தனை பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Bootstrap