ஊதா நிற மின்னல்: விண்வெளியில் இருந்து நாசா வீரர் எடுத்த அபூர்வ புகைப்படம்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருக்கும் நாசா விண்வெளி வீரர் டான் பெட்டிட் (Don Pettit), பூமிக்கு மேலே உருவாகும் ஒரு அபூர்வ இயற்கை நிகழ்வைப் படம்பிடித்து வெளியிட்டுள்ளார்.

அடர்ந்த மேகங்களுக்கு இடையே பிரகாசமாக ஒளிரும் ஊதா நிற (Purple) மின்னலின் வியப்பூட்டும் காட்சியை அவர் விண்வெளியில் இருந்து படம்பிடித்துள்ளார்.

சாதாரண வானுார்திகள் பறக்கும் உயரத்தையும் தாண்டி, சுமார் 50,000 அடி உயரத்தில் உருவாகும் இத்தகைய புயல் மேகங்களை விண்வெளிச் சுற்றுப்பாதையில் இருந்து மட்டுமே மிகத் தெளிவாகக் காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விண்வெளியில் இருந்து பூமியின் அழகையும் புயல் நிகழ்வுகளையும் தெளிவாகப் படம்பிடிப்பதில் புகழ்பெற்ற டான் பெட்டிட் பகிர்ந்த இந்த ஊதா நிற மின்னல் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Bootstrap