BTS ரசிகர்களுக்கு ஆச்சரியம்! 'நமஸ்தே இந்தியா' என வைரலாகும் விளம்பர காணொளி!

பிரபல தென்கொரிய K-pop இசைக்குழுவான BTS, கூகுள் ஜெமினி (Google Gemini) விளம்பரத்தில் தோன்றி இந்திய ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.

கூகுள் இந்தியா வெளியிட்டுள்ள விளம்பர வீடியோவில், BTS குழுவினர் நமஸ்தே இந்தியா எப்படி இருக்கிறீர்கள்? உங்களை நாங்கள் மிஸ் செய்கிறோம், இந்தியாவுக்கு வர விரும்புகிறோம்" என ஹிந்தியில் பேசியுள்ளனர்.

தென்கொரிய இசைக்கலைஞர்கள் இந்திய மொழியில் பேசி அன்பு செலுத்தியுள்ளதால், இந்திய ரசிகர்கள் (ARMY) சமூக வலைதளங்களில் இதனை வைரலாக்கி வருகின்றனர்.

மேலும், BTS குழுவினர் விரைவில் இந்தியாவிற்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் தீவிரமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Bootstrap