ஜப்பானின் டோக்கியோ தலைநகர் உட்பட கிழக்கு காண்டோ (Kanto) பிராந்தியத்தில் ஜப்பனிய நேரப்படி அதிகாலை 2.00 மணியளவில் மெக்னிடியூட் அளவில் 5.9 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு இபராகி (Ibaraki) மாகாணத்தை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 70 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளதுடன், இதனால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
என்.எச்.கே. (NHK) செய்திச் சேவையின்படி, சைதாமா, சிபா மற்றும் டோக்கியோவின் சில பகுதிகளில் நிலை 2 அளவிலான நீண்டநேர நில அதிர்வு நிலைமை (long-period ground motion) அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த பகுதியிலுள்ள உயரமான கட்டிடங்கள் (high-rise buildings) பலமாக அதிர்ந்துள்ளதாகவும், மக்கள் நிலையாக நிற்க முடியாமல் சிரமப்பட்டதோடு வீட்டு உபயோகப் பொருட்கள் சரிந்து விழ்ந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.