கனடாவின் சாஸ்காட்செவன் மாநிலத்தில் உள்ள கிரேட் ப்ளூ ஹெரன் மாகாண பூங்காவில் (Great Blue Heron Provincial Park) நரிகள் முகாமையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் காலணிகளைத் திருடி வருகின்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த திருட்டில் ஐந்து நரிகள் கொண்ட குழு ஒன்று சேர்ந்து இயங்குகிறது. இதில் ஒரு நரி வேவு பார்க்க, மற்றொரு நரி கூடாரங்களில் இருந்து காலணிகளைத் திருடிச் செல்கிறது.
க்ராக்ஸ் (Crocs), ஃபிலிப்-ஃப்ளாப்ஸ், ரன்னிங் ஷூக்கள், பிர்கன்ஸ்டாக்ஸ் மற்றும் அடிடாஸ் சாம்பாஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஒற்றைக் காலணிகள் திருடப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகள் தங்களின் காணாமல் போன காலணிகளைத் தேடிப் பெற்றுக் கொள்ள பூங்கா அலுவலகத்திற்கு வெளியே பெரிய தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
காலணிகள் மேலும் திருடப்படுவதைத் தவிர்க்க, அவற்றைத் தங்களது கூடாரங்கள், வாகனங்கள் அல்லது தங்கும் வீடுகளுக்குள் பாதுகாப்பாக வைக்குமாறு பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.