தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் மின்னலுடன் கூடிய புயல்

தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் மின்னலுடன் கூடிய புயல் காரணமாக வான்கூவர் விமான நிலையத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு 9 மணி முதல் ஞாயிறு அதிகாலை 3 மணி வரை மின்னல் அபாயம் காரணமாக விமானங்கள் புறப்படுவதும், தரையிறங்கிய விமானங்கள் முனையங்களை (gates) அடைவதும் தடைபட்டன. சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில் விமான நிலைய முனையங்களின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தெரியவந்தது.

நிலநடுக்கோட்டுப் பகுதியிலிருந்து நகர்ந்து வந்த குறைந்த அழுத்த மண்டலம் காரணமாக வான்கூவர் மற்றும் ரிச்மண்ட் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மின்னல்கள் தாக்கியுள்ளன.

 B.C. Hydro நிறுவனம் 3,800க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், Pemberton மற்றும் Lillooet இடையேயான நெடுஞ்சாலை 99 உட்பட பல பகுதிகளில் கனமழை காரணமாகப் பயண எச்சரிக்கைகள் மற்றும் ஆற்று நீர்மட்ட உயர்வு பற்றிய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

Connection failed: Operation not permitted