அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லேக்கு எதிராக மூன்றாவது தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பிப்பதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன்,அவரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவமாறு, தேசிய அமைப்புகளின் ஒன்றியம் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளது.
"சல்லேவுக்கான நீதி - கலந்துரையாடல் மன்றம்" என்ற கருப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் பிரதிநிதிகள், இந்த வலியுறுத்தலை விடுத்தனர்.
தொடர்ந்து தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் வைத்திருக்கப்படும் சுரேஷ் சல்லேக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இரண்டாவது தடுப்புக்காவல் உத்தரவுலு எதிர்வரும் 28ஆம் திகதியன்று முடிவடையும் நிலையில், சுரேஷ் சல்லேயை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் அந்தக் குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.