கினியாவில் குப்பைக் கிடங்கு சரிந்ததில் 30 பேர் பலி

மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் கொனாக்ரியில் அமைந்துள்ள மிகப்பெரிய குப்பைக் கிடங்கின் ஒரு பகுதி, கனமழை காரணமாக சரிந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்தச் சரிவில், குப்பைக் கிடங்குக்கு அருகிலிருந்த குடிசைகள் மற்றும் தற்காலிக குடியிருப்புகள் புதையுண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், மேலும் 16 பேர் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடியவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவ இடத்துக்கு பிரதமர் அமடூ ஓரி பா நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டதுடன், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் மேற்பார்வையிட்டார்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்

Bootstrap