ஈரானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில் எரிபொருள் விலையை மீண்டும் உயர்த்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் மக்களைத் தயார்படுத்தி வருகிறது.
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள துறைமுகக் முற்றுகை மற்றும் தொடர்ச்சியான போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கங்கள் காரணமாக நாட்டின் 93 மில்லியன் மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் (மானிய விலையில்) எரிபொருள் வழங்குவது அரசாங்கத்திற்குப் பெரும் நிதிச் சுமையாக மாறியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கணிப்பின்படி 2026 ஆம் ஆண்டில் ஈரானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5.4 சதவீதத்தால் சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் நாளொன்றுக்கு சுமார் 135 மில்லியன் லீட்டர் எரிபொருளை நுகர்கிறது.
ஆனால் நாளாந்த உற்பத்தி 121 மில்லியன் லீட்டராக மட்டுமே உள்ள நிலையில் போரினால் எரிபொருள் இறக்குமதியும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில்இ ஈரானிய அரசாங்கம் தற்போது மூன்று நுகர்வுத் திட்டங்களை பரிசீலித்து வருகிறது:
1) விலையில் மாற்றமின்றி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருப்புத் தீர்ந்ததும் நிலையங்களை மூடிவிடுவது.
2) வாகனம் வைத்துள்ளோர் மற்றும் இல்லாதோர் உட்பட அனைத்துக் குடிமக்களுக்கும் மாதத்திற்கு 30 லீட்டர் எரிபொருளை குறைந்த விலையில் வழங்குவது.
3)அனைவருக்கும் ஒரு லீட்டர் பெட்ரோலை 872,000 ரியால்கள் (சுமார் 44 சென்ட்கள்) வரை உயர்த்துவது.
ஆனால் இது மிகக் கடுமையான பணவீக்கத்தை உருவாக்கும் என்பதால் அரசாங்கம் எச்சரிக்கையுடன் நகர்கிறது
முன்னதாக 2019 மற்றும் 2026 ஜனவரி மாதங்களில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்ட போது நாட்டில் கடுமையான மக்கள் போராட்டங்கள் வெடித்தன.
இதன் காரணமாக இந்த முறை ஈரான் அரசாங்கம் கவனமாக முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதுடன் இறுதி முடிவு வரும் வாரங்களில் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.