அடுத்த மாதம் தென் கொரியாவுடன் இணைந்து நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த “சாங்யோங்” கூட்டு நீர்நிலத் தரையிறக்கப் பயிற்சியை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக தென் கொரியக் கடற்படை தெரிவித்துள்ளது.
ஈரானில் நடைபெற்று வரும் போர் காரணமாக அமெரிக்கப் படைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கக் கடற்படை, படைப்பிரிவு அளவிலான இந்த கூட்டுப் பயிற்சிக்குத் தங்களின் படைகள் பங்கு கொள்வதில் சிக்கல் நிலவுவதாக ஜூன் மாதமே தென் கொரியக் கடற்படைக்கு முறைப்படித் தெரிவித்துவிட்டதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், பயிற்சி மீண்டும் தொடங்கப்படுவது குறித்து இரு நாட்டுப் படைகளும் நெருங்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, அண்மையில் முடிந்த மற்றொரு வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சியையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரெனக் குறைக்குமாறு உத்தரவிட்டிருந்தாக தெரியவருகிறது.