அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், "லேக் ஒன்டாரியோ" (Lake Ontario) ஏரியின் பெயரை "லேக் அமெரிக்கா" (Lake America) என மாற்ற தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஒன்டாரியோவுடன் இனி அதிக வர்த்தகம் செய்யப் போவதில்லை என்பதால் இந்த பெயர் மாற்றம் குறித்து பரிசீலிப்பதாகத் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க நிர்வாகத்தின் சமூக ஊடகப் பதிவுகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை என கனடா கூட்டாட்சி அரசு முடிவெடுத்துள்ளதாகக் கனடாவின் வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் தெரிவித்துள்ளார்.
கனடாவின் $20 பில்லியன் மதிப்பிலான ஏற்றுமதிப் பொருட்களுக்கு (பால் பொருட்கள், ஒயின், மரச்சாமான்கள், ஹாக்கி உபகரணங்கள் போன்றவை) அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்ததைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
லேக் ஒன்டாரியோ ஏரியானது வட அமெரிக்காவின் ஐந்து பெரும் ஏரிகளில் ஒன்றாகும். இது கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்திற்கும் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திற்கும் இடையே எல்லையாக அமைந்துள்ளது.