இணையத்தில் வைரலாகும் ரஜினி - ஸ்ரேயா சரண் செல்பி!

'தர்மன்' படப்பிடிப்பு தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், "ஒரு ஜாம்பவானைச் சந்திக்கும்போது, ​​ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வது அவசியம்தானே?" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான 'தர்மன்' படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும், இந்த படத்தில், சிம்ரன், ஸ்ரேயா சரண், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Bootstrap