‘GREY’ திரைப்படத்தின் நடிகர்கள் பட்டியலில் நடிகர் Rizwan இணைவு

Azonway Pictures தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘GREY’ திரைப்படத்தின் நடிகர்கள் பட்டியலில் இலங்கைத் திரைத்துறையின் முன்னணி நடிகர் Rizwan இணைந்துள்ளார்.

இப்படத்தில் “ரிஸி” என்ற முக்கிய கதாபாத்திரத்தில் Rizwan நடித்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Shelvin Das தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் ‘GREY’ திரைப்படத்தை இயக்குநர் Lee Murali இயக்கி வருகிறார். பல்வேறு மொழி ரசிகர்களையும் சென்றடையும் வகையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

தொடர்ச்சியாக நடிகர்கள் மற்றும் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி வரும் ‘GREY’ படக்குழுவிடமிருந்து மேலும் பல முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.

Bootstrap