சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் ஆலோசகர் பதவியை ஏற்பதற்காக, அணியின் பங்குகளில் கணிசமான பங்கை வழங்குமாறு முன்னாள் இந்திய அணியின் தலைவர் தோனி கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிஎஸ்கே அணியின் ஆலோசகராகப் பொறுப்பேற்கத் தயாராக உள்ள தோனி, ஆரம்பத்தில் அணியின் 25 சதவீத பங்குகளைக் கோரியுள்ளார்.
இதனையடுத்து, அது குறித்து பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
தோனி கேட்ட சதவீதத்தை வழங்குவதற்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் ஆரம்பத்தில் மறுப்புத் தெரிவித்த நிலையில், இறுதியில் தோனி 18 சதவீத பங்குகளைக் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், 5.5 சதவீத பங்குகளை மட்டுமே வழங்க முன்வந்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், தோனியின் இந்த பங்குரிமை விவகாரம் மற்றும் ஐபிஎல்லின் அடுத்த பருவத்தில் அவரது பங்களிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.