பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம் : குழந்தை பராமரிப்புக்காக ரூ.53 இலட்சம் வரை நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிப்பு!

சிங்கப்பூரில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு குழந்தை பிறந்தது முதல் 17 வயது நிறைவடையும் வரையில், குழந்தை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக மொத்தமாக சுமார் ரூ.53 இலட்சம் (இந்திய மதிப்பில்) நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகளை பெற்றோருக்குக் குறைக்கும் வகையிலும், குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த புதிய திட்டம் தொடர்பான அறிவிப்பை சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங் (Lawrence Wong) அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை எதிர்கொள்வதற்காக அரசாங்கம் பல்வேறு சலுகைகள் மற்றும் ஆதரவு திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த புதிய நிதியுதவி திட்டம் அதில் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

Bootstrap