RSS அமைப்பின் 100-வது ஆண்டை ஒட்டி, 'AHEAD Forum' சார்பில் "Universal Oneness Celebration" என்ற பெயரில் ஆகஸ்ட் 29 அன்று இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேயர் மம்தானி, மதச்சார்பற்ற மற்றும் பன்மைத்துவக் கொள்கை கொண்ட இந்தியாவையே தான் அறிந்திருப்பதாகவும், பிரிவினையை ஏற்படுத்தும் இத்தகைய கொள்கைகளைத் தான் எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியைத் தான் விரும்பவில்லை என்றாலும், மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடக்கும் ஒரு தனியார் நிகழ்ச்சியை ரத்து செய்ய நியூயார்க் நகராட்சிக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளதா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
மனித உரிமை அமைப்புகளான Hindus for Human Rights மற்றும் Indian American Muslim Council போன்றவை இந்த நிகழ்வை ரத்து செய்ய வலியுறுத்தி நியூயார்க் சிட்டி ஹால் முன்பு போராட்டம் நடத்தியுள்ளன.