மெக்சிகோவின் துல்டெபெக் (Tultepec) நகரில் உள்ள பட்டாசு தயாரிப்பு மையத்தில் இரண்டு சக்திவாய்ந்த வெடிப்புகள் ஏற்பட்டு தொழிற்சாலை முழுமையாக எரிந்து சாம்பலானது.
அடுத்தடுத்து ஏற்பட்ட வெடிப்புகளால் தொழிற்சாலை கட்டிடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. விண்ணை முட்டும் அளவிற்குத் தீப்பிளம்புகளும் புகையும் எழுந்தன.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.