17 வயது மாணவி, முன்னாள் காதலனால் சுட்டுக் கொலை!

அமெரிக்காவின் மேரிலாந்தை சேர்ந்த 17 வயதான ஜாடா செல்லர்ஸ் (Jada Sellers) என்ற பிளஸ் டூ பள்ளி மாணவி, அவரது முன்னாள் காதலன் கிறிஸ்டியன் ஹெர்சி (Christian Hursey, 18) என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஜாடா செல்லர்ஸ் மில்ஃபோர்ட் மில் அகாடமியில் பயின்று வந்த ஒரு சிறந்த மாணவி. இவர் சமூக வலைதளங்களில் (Tik Tok / Social Media) 2.4 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் (Followers) கொண்டிருந்த ஒரு பிரபல இளம் படைப்பாளி ஆவார்.

ஆகஸ்ட் 20 அன்று, இக்கொலை வழக்கில் சோதனையிட பால்திமோர் கவுண்டி பொலிஸார் ஹெர்சியின் வீட்டிற்குச் சென்றபோது, அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

பொலிஸ் விசாரணையில், கொலையாளி ஹெர்சியின் குடும்பத்திலும் இதேபோன்ற ஒரு கொடூரமான வன்முறை வரலாறு இருந்தது தெரியவந்தது. 2017-ஆம் ஆண்டில், ஹெர்சி சிறுவனாக இருந்தபோதே, அவரது தந்தை அவரது தாயாரைக் குடும்ப வன்முறையின் காரணமாகச் சுட்டுக் கொன்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bootstrap