பிரபல ஹொலிவூட் நடிகர் டிம் கரி காலமானார்

'தி ரொக்கி ஹெரர் பிக்சர் ஷோ' (The Rocky Horror Picture Show) திரைப்படத்தில் ஃபிராங்க்-என்-ஃபர்டராக நடித்து உலகப் புகழ் பெற்ற பிரபல ஆங்கில நடிகர் டிம் கரி (Tim Curry) தனது 80ஆவது வயதில் காலமானார்.

லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு அவருக்கு ஏற்பட்ட கடுமையான பக்கவாதம் காரணமாக சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வந்த அவர், குரல் கொடுக்கும் கலை மற்றும் எழுத்துப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

1973ஆம் ஆண்டு நாடக மேடையில் ஆரம்பித்த 'தி ரொக்கி ஹெரர் பிக்சர் ஷோ என்ற கதாபாத்திரம், 1975 ஆம் ஆண்டில் திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய கலாசாரத் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதில் டிம் கரியின் நடிப்பு உலக சினிமா வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தது.

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நகைச்சுவை, திகில் மற்றும் இசை நாடகங்கள் எனத் தனது பன்முகத் திறமையால் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை டிம் கரி கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bootstrap