இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் மீது ,ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் கடந்த மே மாதம் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
பெர்க்ஷயரைச் சேர்ந்த 31 வயதான ரஹீம் ஸ்டெர்லிங் மீது, முறையற்ற நுகர்வுக்காக நைட்ரஸ் ஒக்சைட்டை வைத்திருந்தமை மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு மாதிரியை வழங்க மறுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அவர் எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்சியா அணியிலிருந்து விலகிய பின்னர், நெதர்லாந்து அணியான ஃபெயெனூர்ட் (Feyenoord) அணிக்காக விளையாடிய ஸ்டெர்லிங், கடந்த பருவத்தில் எந்த அணியுடனும் ஒப்பந்தத்தை செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.