கிங்ஸ்டனில் காவல்துறையினரால் ஒருவர் பலமுறை சுடப்பட்ட சம்பவம் குறித்து SIU விசாரணை

கிங்ஸ்டனில் காவல்துறையினரால் ஒருவர் பலமுறை சுடப்பட்ட சம்பவம் குறித்து SIU விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை 9:40 மணியளவில் கட்டாராகி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள Waaban Crossing பாலத்தில் இத்துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. இதனையடுத்து அந்த பாலம் போக்குவரத்துக்காக மூடப்பட்டது.

 பாலத்தில் மன உளைச்சலில்/துயரத்தில் ஒரு நபர் இருப்பதாக காவல்துறைக்கு சுமார் 10 நிமிடங்களுக்கு முன்பு 911 அவசர அழைப்பு வந்தது.

காவல்துறையினர் பாலத்தில் அந்த நபரை எதிர்கொண்டபோது ஏற்பட்ட மோதலின் போது, இரண்டு அதிகாரிகள் தங்களது துப்பாக்கிகளால் சுட்டதில் அந்த நபர் மீது பல முறை குண்டுகள் பாய்ந்தன.

பலத்த காயமடைந்த அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவ இடத்தில் இருந்து சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளின் சேவைத் துப்பாக்கிகளையும், காயமடைந்த நபருக்குச் சொந்தமான மூன்றாவது துப்பாக்கியையும் SIU புலனாய்வாளர்கள் கைப்பற்றினர்.

இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த Special Investigations Unit (SIU) சார்பாக நான்கு புலனாய்வாளர்கள் மற்றும் இரண்டு தடயவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Bootstrap