சட்டவிரோதமாக துப்பாக்கிகளை இறக்குமதி செய்ததை ஒப்புக்கொண்ட விமானப்படை மேஜருக்கு வீட்டுக்காவல் தண்டனை

சட்டவிரோதமாக எட்டு துப்பாக்கிகளை கனடாவுக்குள் இறக்குமதி செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ராயல் கனடியன் விமானப்படை மேஜர் கென்ட்ரிக் பார்லிங்கிற்கு (Maj. Kendrick Barling) இரண்டு ஆண்டுகள் வரை வீட்டுக்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 சிறந்த துப்பாக்கி சுடும் வீரரான (Sharpshooter) பார்லிங், NORAD-இல் பணிபுரிந்துவிட்டு ஆகஸ்ட் 2023-இல் கனடா திரும்பியபோது, தனது ஆடைகள் மற்றும் காலணிகளுக்கு இடையே வரிசை எண்கள் இல்லாத துப்பாக்கி பாகங்களை மறைத்து எடுத்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவர் செய்த தவறு தீவிரமானது என்றாலும், நாட்டின் பாதுகாப்புப் படைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஆற்றிய மிகச்சிறந்த சேவை, அவரது குற்றத்தை ஒப்புக்கொண்டமை மற்றும் தனது துப்பாக்கிகளின் சேகரிப்பை இழந்துள்ளது ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த தண்டனை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தில் அவரது பணிக்கு தேவைப்படும் பட்சத்தில் தவிர, மற்ற நேரங்களில் ஆயுதங்கள் வைத்திருக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் தனது வேலையை இழக்காத வகையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கனடிய ஆயுதப்படை (CAF) தற்போது பார்லிங்கின் நடவடிக்கை குறித்து நிர்வாக ரீதியான மறுஆய்வை (Administrative Review) தொடங்கியுள்ளது.

Bootstrap