நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 160-க்கும் மேற்பட்டோர் பலி

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 24 கனடிய சுற்றுலா பயணிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.

நேபாளப் பகுதியில் உள்ள பனிப்பாறையில் ஏற்பட்ட பனி மற்றும் பாறைச் சரிவு காரணமாக 'போட்டேகோஷி' (Bhotekoshi) ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்கள், சாலைகள் மற்றும் நீர்மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

காணாமல் போனவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 133 பேர் (கைலாஷ் யாத்திரை சென்றவர்கள்), அமெரிக்காவைச் சேர்ந்த 47 பேர், கனடாவைச் சேர்ந்த 24 பேர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 34 பேர் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த 33 பேர் அடங்குவர்.

 சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிடமும் நேபாள அரசு மீட்பு உதவி கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் (UN) நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகிறது.

 கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் உள்ள கனடியர்களை உடனடியாக ROCA அமைப்பில் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Bootstrap