அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீயர் (Jamieson Greer), இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் முறிந்ததற்கு அமெரிக்காவின் கடைசி நேர நிபந்தனைகள் காரணமல்ல என்றும், ஒட்டாவா தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட கூடுதல் கோரிக்கைகளே காரணம் என்றும் கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை முறிந்த பிறகு தற்போதைக்கு இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வ தொடர்பு வழிகள் ("open channels") எதுவும் திறந்திருக்கவில்லை என்று கிரீயர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), அமெரிக்கா இறையாண்மையைப் பாதிக்கும் வகையிலும் நியாயமற்ற முறையிலும் கடைசி நேரத்தில் மாற்றங்களைக் கொண்டுவர முயன்றதால் ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்று கூறியிருந்தார்.
அமெரிக்க தயாரிப்புகளுக்கு எதிராக கனடா $28 பில்லியன் மதிப்புள்ள பதிலடி சுங்க வரிகளை அறிவித்துள்ள நிலையில், அதற்கு அமெரிக்கா மீண்டும் பதிலடி கொடுக்கக்கூடும் என்று கிரீயர் எச்சரித்துள்ளார்.
எஃகு மீதான வரிகளை 50%-லிருந்து 25%-ஆகக் குறைக்கவும், கனடாவில் தயாரிக்கப்படும் வாகனங்கள் மீதான வரிகளை 15%-ஆகக் குறைக்கவும் அமெரிக்கா தயாராக இருந்ததாக கிரீயர் குறிப்பிட்டுள்ளார்.