நேபாளம்-திபெத் திடீர் வெள்ளப்பெருக்கு: 270 உடல்கள் மீட்பு; சுமார் 1,400 பேரைக் காணவில்லை

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் இதுவரை 270 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் 1,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களில் 288 இந்தியர்களும் அடங்குவர். மேலும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற சுமார் 200 இந்தியர்கள் திபெத்தின் தார்சென், ஜிலாங் போன்ற இடங்களில் சிக்கியுள்ளனர். தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த 21 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

நேபாள சுற்றுலா வாரியத்தின் தகவல்படி 517 வெளிநாட்டவர்கள் உட்பட 644 சுற்றுலா பயணிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போயுள்ளனர்.

திரிசூலி-1 நீர்மின் திட்டத்தில் பணிபுரிந்த 73 இந்திய தொழிலாளர்கள் மற்றும் தென்கொரிய தொழிலாளர்கள் பலரைக் காணவில்லை.

 பிரிட்டன் அரசு 5 மில்லியன் பவுண்டுகள் நிவாரண உதவி அறிவித்துள்ளது. CARE Nepal போன்ற சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அவசர நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றன.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நேரில் பார்வையிட சீனப் பிரதமர் லீ சியாங் (Li Qiang) திபெத்தின் கியிராங் நகருக்கு வருகை தந்துள்ளார்.

Bootstrap