அமெரிக்க மத்திய உளவுத்தலைவரின் ரஷ்ய பயணத்தின் இரகசியம் வெளியானது?

அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவு (CIA) தலைவர் ஜோன் ராட்கிளிஃப் (John Ratcliffe) இரகசியமாக மொஸ்கோவுக்கு பயணம் மேற்கொண்டு ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளைச் சந்தித்துள்ளதாக கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தப் பயணத்தை "சாதாரணமானது" என்று வர்ணித்தாலும், யுக்ரைன் போரில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் சிஐஏ தலைவர் திடீரென மொஸ்கோவிற்குச் சென்றது அரசியல் தரப்பில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

யுக்ரைன் போரில் நிலவிவரும் தேக்கநிலை குறித்தும், குறிப்பாக நேட்டோ (NATO) நாடுகளுக்கு எதிராக ரஷ்யா எந்தவிதமான தீவிர நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என எச்சரிப்பதற்காகவே ராட்கிளிஃப் இந்தச் சந்திப்பை நடத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போல்டிக் நாடுகள் மீது ரஷ்யா குறைந்த அளவிலான தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை மதிப்பீடுகளுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

யுக்ரைனின் நீண்ட தூர ஆளில்லா வானுார்தி தாக்குதல்களால் ரஷ்யாவின் எரிபொருள் ஆலைகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் சேதமடைந்துள்ளதுடன், பெட்ரோல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் ரஷ்யா உள்நாட்டு அழுத்தங்களைச் சந்தித்து வருகிறது.

Bootstrap