மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 60 குழந்தைகள் உயிரிழப்பு!

மேற்கு வங்க மாநிலம் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே வாரத்தில் புதிதாகப் பிறந்த 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரே நாளில் 10 குழந்தைகள் இறந்துள்ளன.

மஞ்சள் காமாலை, சுவாசக் கோளாறு மற்றும் இதய நோய்கள் காரணமாகவே உயிரிழப்புகள் நேரிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு அம்மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

Bootstrap