ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் விஜயம்

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள இல்லத்திற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் குழுவொன்று இன்று சனிக்கிழமை (29) விஜயம் செய்துள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு ஏற்கனவே அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்ததன் பிரகாரம் அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் நோக்கம் மற்றும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ விளக்கம் வெளியாகும் பட்சத்தில், மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Bootstrap