இலங்கை வந்தடைந்தார் நடிகை அபிராமி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான அபிராமி இலங்கை வந்துள்ளார்.

'வானவில்' படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் 'மிடில் கிளாஸ் மாதவன் 'தோஸ்த் 'சார்லி சாப்ளின்' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

கமல்ஹாசனுடன் இவர் நடித்த 'விருமாண்டி' திரைப்படத்தின் 'அன்னலட்சுமி' கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

'மகாராஜா' 'வேட்டையன்' மணிரத்னத்தின் 'தக் லைஃப்' மற்றும் அண்மையில் வெளியான 'பிளாஸ்ட்' ஆகிய திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bootstrap